கரையோர ரயில் சேவை முற்றாகப் பாதிப்பு!

0
81

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கரையோர ரயில் சேவை முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாணந்துறை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.35 மணியளவில் மருதானை நோக்கிச் சென்ற ரயிலானது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் பிரவேசித்த வேளையிலேயே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.