உள நல குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில்புனர்வாழ்வு சிகிச்சை பெற்றுவருவோரது வாழ்வாதார
மேம்பாட்டிற்கான விசேட திட்டமொன்று கிழக்கு மாகாணத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவடிவேம்பு உள நல புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கர்பிணித்தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கு சத்துமா பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகஅரசாங்கத்தினால் திரிபோசா சத்துமா வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதையடுத்து கர்ப்பிணித்தாய்மார் மற்றும் குழந்தைகளின் போசாக்கு வீதம் குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு திரிபோஷh மா வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும்வரை இத்திட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சுசிகலா பரமகுருநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன்,உள நலவைத்தியதிகாரி ரீ.கடம்பநாதன்; டாக்டர் வி.ஜ.Pகே.பிரான்ஸிஸ்,தாய் சேய் நலவைத்தியர் எம். அச்சுதன், டாக்டர் அனஸ்லி, டாக்டர் டேன் சௌந்தரராஜன்,பிரதேச சுகாதார வைத்தியதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.