கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு போஷாக்கு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் போசணை குறைப்பாட்டில் வாழும் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு தன்மையை மேம்படுத்தும் வகையில் ,சமாரித்தன் பேர்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரபாசங்கர் தலைமையில் மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட தாய்மார்களின் தெரிவு செய்யப்பட தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கு நிகழ்வில் ,சமாரித்தன் பேர்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி தெற்காசியா இணைப்பாளர் சிவானந்தாஸ் ரமணதாஸ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பொதிகளை வழங்கி வைத்திருந்தனர்
நிகழ்வில் மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,சமாரித்தன் பேர்ஸ் நிறுவன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்