கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்குப் பொதி: பற்றுச்சீட்டுக்கள் கையளிப்பு

0
225

மட்டக்களப்பு மாவட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு, போசனை மட்டத்தினை அதிகரிப்பதற்காக வழங்கப்படவுள்ள போசக்கு பொதிக்கான பற்றுச்சீட்டுக்கள்
வழங்கும் நிகழ்வு, இன்று மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.
பெண்கள் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினுடாக தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான
பற்றுச்சீட்டுக்கள் கையளிக்கப்பட்டன.
இத் திட்டத்தினூடாக கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு தன்மையை அதிகரிப்பதற்காக 45 ஆயிரம் ரூபா பெறுமதியான போசாக்கு பொதி
வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.