பிரித்தானியா கரோவ் கவுன்சிலின்
கவுன்சிலரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கல்

0
278

பிரித்தானியா கரோவ் கவுன்சிலின் கவுன்சிலரினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்
கடுக்காமுனை அருள்நேசபுரத்தில் உள்ள கடுக்காமுனை வாணி வித்தியாலயம் மற்றும் கடுக்காமுனை பாலர் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக பிரித்தானியாவின் கரோவ் கவுன்சிலின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான லண்டன் பாபா என்று அழைக்கப்படும் சுரேஷ் கிருஷ்ணா அவர்களும், சிறப்பு அதிதிகளாக இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும் ,இந்து அறநெறி அபிவிருத்தி மன்ற தலைவர் வை. ரவீந்திரன் அவர்களும், லக்ஷ்மி நாராயணன் ஆலய தலைவர் வை.சந்திரமோகன் அவர்களும், மேலும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழா பிரதி அதிபர் எஸ் சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இங்கு சாதனை புரிந்த மாணவர்களுக்கும் மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.