யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி கீரிமலை சடையம்மா மடம் ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்து நிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் சாதனைத்தமிழன் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நீண்ட காலமாக சைவ மக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் இவற்றை விடுவிப்பதில் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகிறோம்.
மேலும் பொதுமக்களின் காணிகளில் வடக்கு கிழக்கில் படையினர் தொடர்ந்து தங்கி உள்ளனர்.
தாங்கள் அவ்விடயத்தில் அக்கறை கொண்டு பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும்.
நிரந்தரமான பூரண உரிமைகள் உள்ளடக்கிய தீர்வை வழங்கி எம்மினத்தின் நீண்டகாலப் பிரச்னையை தீர்த்து வைக்க முன்வாருங்கள் என சாதனைத்தமிழன் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.