கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனையின் அதிகாரி வைத்தியர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர் அடங்கிய குழுவினர் கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனையில் மேற்கொண்ட 78 பேருக்கான அன்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் கல்முனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர்களின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன்
தொற்றக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கல்முனையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும், வீதிகளில் செல்வோருக்கும் எழுமாற்றாக அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.