பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை ஆகிய இடங்களில் இன்று இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் தொற்றாளர்களுடன் அடையாளங்காணப்பட்ட நபர்களுக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பிரிசோதனைகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டன.
கல்முனை வடக்கு சுகாதாரப்பணிமனையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதற்கமைய இன்று கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை ஆகிய இடங்களில் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்ட்ட குடும்பங்கள் மற்றும் தொற்றாளர்களுடன் பழகிய நபர்கள், மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புட்டவர்கள் என 54 பேருக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதில் கல்முனையில் இருவரும், பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் இருவரும் என நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தை கொரோனா தொற்று அற்ற பிரதேசமாக கட்டுப்படுத்துவதற்க்கு பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பேணுமாறும், சுகாதாரப்பிரிவினர் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் ஆர்.கணேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.