கல்முனையில் பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதிகளில் பயணிக்கும் மக்கள்

0
303

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் வழமை போன்று மக்கள் பயணங்களில் ஈடுபடுவதை காண முடிந்தது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி, இஸ்லாமபாத், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, சவளக்கடை, மத்தியமுகாம், பொத்தவில் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி தத்தமது வாகனங்களில் வழமை போன்று மக்கள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது.

குறித்த பகுதிகளில் பொலிஸார் சுகாதார தரப்பினர் பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் மந்த கதியில் உள்ளதை சாதகமாக பயன்படுத்தி இவ்வாறு பயணத்தடை மீறலில் ஈடுபடுகின்றனர்.



கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை, அக்கரைப்பற்று மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் இவ்வாறு பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் பயணத்தடையை மீறி செயற்படுகின்றனர்.
கடந்த 21 ஆம் திகதி 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 4 மணிவரை பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் இவ்வாறு பயணத்தடையை மீறும் செயற்பாடு தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.