கல்முனையில் முறையற்றவிதத்தில் அகற்றப்படும் மனிதக் கழிவுகள்

0
200

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நீர் நிலைகளில் மனிதக் கழிவுகளை கொட்டுவதற்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அகற்றப்படும் மனிதக் கழிவுகளை முறைகேடாக அகற்றுவதன் மூலம் பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனை மாநகர சபை முன்றலில் இன்று கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான கந்தசாமி சிவலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

மனித கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் அந்த கழிவுகளை மீன்கள் உண்பதனால் மீன்களை மக்கள் உண்ண முடியாத நிலையும் ஏற்படும்.

கல்முனை மாநகர மேயர் இந்த நடவடிக்கையை உடன் நிறுத்தி மாற்று வழியை செய்ய வேண்டும் என மாநகர சபை உறுப்பினர்களான சிவலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.