கல்முனை ஆதார வைத்தியசாலையில்
விழிப்புணர்வு பயிற்சி

0
123

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிணநீர் தேக்கவீக்க முகாமைத்தும் மற்றும் யானைக்கால் நோய் ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு பயிற்சியில் வளவாளர்களாக வைத்திய நிபுணர் டாக்டர் முரளிவள்ளிபுரநாதன், சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் ஆகியோர் கலந்துகொண்டு நிணநீர் தேக்கவீக்கம் எவ்வாறுஏற்படுகிறது, இந்நிலை ஏற்பட்டால் எவ்வாறு பராமரிப்பு வழங்கவேண்டும், இந்நோய் நிலையின் போது செய்யப்படும் சத்திரசிகிச்சைகள் பற்றிய விளக்கங்கள் செயல்முறை மூலம் வழங்கப்பட்டன.