கல்முனை கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானம்

0
128

இராணுவத்தினரால் அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறியின் ஆலோசனைக்கமைய,
241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில், இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை மற்றும் அதனை அண்டிய பல பகுதிகள்
சிரமதான செய்யப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகரை தூய்மைப்படுத்தும் மாநகர ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மியின் அறிவுறுத்தலுக்கமையை கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு
உத்தியோகத்தர் யு. எம். இஸ்ஹாக் தலைமையில் மேற்பார்வை உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் சிரமதானப்பணிக்கு பங்களிப்பும் வழங்கப்பட்டது.
சமுர்த்தி பயனாளி குடும்பங்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.