கல்முனை தலைமையக பொலிஸ்
நிலைய பகுதிகளில் சிரமதானம்

0
124

கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸார் இணைந்து சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் உள்ள குப்பைகூழங்கள் மற்றும் காடுமண்டிய இடங்கள் யாவும் துப்பரவு செய்யப்பட்டன.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு போக்குவரத்து பிரிவு சிறு குற்றத்தடுப்பு பிரிவு இபெருங் குற்றத்தடுப்பு பிரிவு சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு என்பன பங்கேற்றிருந்தனர்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு செப்டம்பர் மாதம் 3 ஆந் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கொண்டாடும் வகையில் நாடு பூராகவும் பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.