கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

0
140

அம்பாறை கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷராப் தலைமையில், கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
கல்முனை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லை பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகள் மற்றும் தீர்வுகள், மருதமுனை சுனாமி வீடுகள் பகிர்ந்தளிப்பு போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, முடிவுகளும் எடுக்கப்பட்டன.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம் ரக்கீப் உட்பட திணைக்களப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.