கல்முனை பிரதேச செயலக கலாசார
அதிகார சபை உறுப்பினர்கள் தெரிவு

0
216

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடல் இன்று பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்றது.பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் .கிபானா ஜிப்ரியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்ஸான், கலாசார அதிகார சபையின் முன்னாள் செயலாளர் எஸ்.எல். அஸீஸ் உட்பட பிரதேச துறை சார்ந்த கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாக சபையை தெரிவு செய்தனர்.

கல்முனை பிரதேச கலாசார அதிகார சபையின் புதிய தலைவராக எழுத்தாளரும் ஆய்வாளருமான ஏ.எம் பறக்கத்துல்லா தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் விஜிலி எம். மூஸா தெரிவு செய்யப்பட்டார்.பொருளாளராக எம்.அஸ்மி தெரிவு செய்யப்பட்டதுடன் கல்முனை, மருதமுனை, நட்பட்டிமுனை போன்ற பிரதேசங்களில் இருந்து துறை சார்ந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிகழ்வின் போது கல்முனை ஸாகிர் ஹூசைன் இயக்கி நடித்த விழிப்புணர்வு குறுந் திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.