கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை மத்தி சமுர்த்தி வங்கிபிரிவின் மேல் தளம் திறப்பு விழாவும்,வங்கி கணினிமயப்படுத்தல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று கல்முனை மத்தி சமுர்த்தி வங்கிமுகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாய தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் கலந்துகொண்டார். அத்துடன் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் வி.சிறிநாதன், முகாமைத்துவப் பணிப்பாளர் வி.தாஹிர்,சமுர்த்தி முகாமையாளர் கே.இதயராஜ்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பி.,ராஜகுலேந்திரன்,நிர்வாக உத்தியோகத்தர் ஜீவராஜ்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அமலதாஸ் உட்படசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.