அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பற்ற வடிகான்கள் மூடிகள் இடப்படாமையின் காரணமாக வீதிகளில் போக்குவரத்து செய்வதில் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
வீதி ஒன்றின் குறுக்காக போடப்பட்டுள்ள வடிகான்களின் மூடிகள் இவ்வாறு சேதமடைந்து காணப்படுவதனால் அவ்வழியாக போக்குவரத்து செய்வதில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சேதமடைந்த வீதியுடன் கூடிய பாதுகாப்பற்ற வடிகான்களினூடகவே கல்முனை சிங்கள மகா வித்தியாலயம், மாமாங்க வித்தியாலயம் கல்முனை பொதுச்சந்தை விகாரை உள்ளிட்ட பொதுநிறுவனங்களுக்கு போக்குவரத்தை மேற்கொள்வதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.