அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் லெஜன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான ஆடுகள விரிப்பு இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், லெஜன்ஸ் கழக செயலாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கமைய கல்முனை பொலிஸார் மற்றும் அம்பாறை தடயவியல் பொலிஸ் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எரியூட்டப்பட்ட மைதான ஆடுகள விரிப்பின் பெறுமதி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது மைதானத்தில் கடமையாற்றும் காவலாளி கடமையில இருக்கவில்லை என்றும் இது போன்ற சம்பவம் 5 ஆண்டுகளுக்கு முன்பும் இடம்பெற்றுள்ளதாகவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிக்கின்றனர்.