29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக மாடு அறுக்க தடை

நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக மாடு அறுப்பதும் மாட்டிறைச்சி விற்பதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சில மாடுகள் கல்முனை பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அது ஏனைய மாடுகளுக்கு விரைவாக பரவக்கூடிய வாய்ப்புகள்
காணப்படுவதனாலும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி மக்களின் நுகர்வுக்கு உகந்ததல்ல என்றும் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபை எல்லையினுள் குறித்த காலப்பகுதியில் மாடு அறுத்தல், மாட்டிறைச்சியை விற்பனை செய்தல் மற்றும் மாட்டிறைச்சிறைச்சியை
பொதி செய்தல் என்பன தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவை மீறி செயற்படுகின்ற மாட்டிறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles