26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரிவு முடக்கம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப்பிரிவில் கடமையாற்றும் இரு ஊழியர்கள் கொரோனாதொற்றக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத்தொடர்ந்து குறித்த பிரிவு மூடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனையின் வேண்டுகோளுக்கமைய தற்காலிகமாக குறித்த நிர்வாகப்பகுதியின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே இப்பகுதியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தொற்றக்குள்ளாகியிருந்த நிலையில் நேற்று(10) சுகாதாரப்பிரிவினரால் எழுமாற்றாக 74 உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் ஒரு ஊழியர் தொற்றக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்ட்டது.

இதனையடுத்து குறித்த நிர்வாகப்பிரிவின் செய்ற்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அவசியமான தேவைகள்இருப்பவர்கள் மட்டுமே பிரதேச செயலகத்திற்க்கு வருகைதருமாறு பிரதேச செயலக முன்றலில் பொதுமக்களுக்கானஅறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles