கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்
சிறுவர் விழிப்புணர்வு கருத்தரங்கு

0
189

கல்முனை வடக்கு சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பக்களின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினம் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் இதயராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டார். அத்துடன் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ், நிர்வாக உத்தியோகத்தர் ஜீவராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிறிநாதன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் அமலதாஜ், உளவள ஆலோசகர் கலா, பிரதேச அமைப்பின் தலைவி வசந்தராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சிறுவர் தினத்தில் சிறுவர்களுக்கு பரிசுபொருட்கள் வழங்கி வைக்கப்ட்டதுடன், சிறுவர் போஸாக்கு மற்றும் பிள்ளை வளர்ப்பு ஆகியன தொடர்பாக பெற்றோர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெற்றது.