கல்லுண்டாயில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்!
ஐனவரி மாதம் முதலாம் திகதி மானிப்பாய் கல்லுண்டாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் மாவட்ட போலீஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரேகைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்,