களுத்துறை, பலாத்தொட்ட விஜயகம பிரதேசத்தில், இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னதுவ ஹேவாகே என்ற 27 வயது இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.