கிளிநொச்சி, பூநகரி, சின்னப் பல்லவராயன் கட்டு பகுதியில் களுத்தவறணை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் புதிதாக கள்ளுத்தவறணை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அப்பகுதியிலுள்ள சுமார் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இது தொடர்பில் இன்று மாலை பிரதேச செயலாளருக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளரை நாம் தொடர்பு கொண்டு வினவினோம்.
கள்ளுத்தவறணை அமைப்பதற்கான கோரிக்கைகள் பூநகரி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினால் முன்வைக்கப்படடுள்ளதாகவம் இருப்பினும் அதற்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை எனவும் பூநகரி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.