”கழிகளை கண்ட கண்ட இடங்களில் வீசக்கூடாது என்று கற்பிக்க வேண்டும்”

0
23

பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் கழிகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எறியாமல், அவற்றை உரிய இடத்தில் போடுவதை பாடசாலை மட்டங்களிலிருந்து பழக்கப்படுத்த வேண்டும் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.

யு. என். டி. பி. நிறுவனத்தால் மன்னாரில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் தொடர்பான அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
இதன்போது அரச அதிபர் மேலும் கூறுகையில்,

யு. என். டி. பி. அமைப்பானது மன்னார் மாவட்டத்தில் ஆறு குழுக்களுக்கு நிதி வழங்கி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

சூழல் நேயத்தை முன்னிறுத்தி இந்தத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. சூழல் மாசடையாது அதாவது உச்சக்கட்டத்துக்கு செல்லாது தடுக்கும் நோக்கில் இத்திட்டம் நடைபெறுகிறது.

நாங்கள் முன்னெடுத்துச் செல்லுகின்ற எந்த அபிவிருத்தித் திட்டமும் சூழலோடு சேர்ந்த திட்டமாக அமைய வேண்டும். அப்பொழுதுதான் இவை நிலைத்திருக்கும்.

சூழலுக்குப் பொருத்தமான திட்டங்களை பிரதேச செயலாளர்களுடன் பங்குதாரர்கள் இணைந்து செயல்படும்போதுதான் இவை சிறப்பாக அமையும்.

இங்கு முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களை நோக்கும்போது மிகவும் பிரயோசனமானதாக இருக்கிறது. ஆகவே, அனைத்து பங்குதாரர்களும் உங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பிளாஸ்ரிக் பொருட்களை மற்றும் கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எறியாமல் அவற்றை உரிய இடத்தில் போடுவதை பாடசாலை மட்டங்களில் இருந்து பழக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு குப்பைகள் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை உரிய இடங்களில் போடும் பழக்கத்தை பொது மக்களும் கொண்டிருக்க வேண்டும்.

நகர சபை மற்றும் பிரதேச சபைகள் இவற்றை நடைமுறைப்படுத்துகின்றபோதும் இவை விஸ்தரிக்கப்பட வேண்டும்.
மன்னார் மாவட்டத்தை சுற்றுச்சூழல், பச்சையம் கொண்ட மாவட்டமாக வைத்திருக்க முடியும்- என்றார்.