கழிவு முகாமைத்துவம் தொடர்பில், மட்டு.ஏறாவூரில் செயலமர்வு

0
279

பாடசாலை மாணவர்கள், சமூக பிரதிநிதிகளுக்கான கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
தகவல் தொடர்பாடல் பயிற்சி மையம், ஏறாவூர் நகரசபையுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் ஹமீம் தலைமையில் இடம் பெற்ற செயலமர்வில், ஏறாவூர் நகரசபை நிர்வாகம் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில்
எதிர் கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், முறையான கழிவகற்றல், கழிவுகளைத் தரம் பிரித்தல், கழிவுகளை பாதுகாப்பாகக் கையாளுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டன.