காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இடையில் ‘யாழ்நிலா’ விரைவு புகையிரதம்

0
115

காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய நகரங்களுக்கு இடையேயான விரைவு புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புகையிரதம் நேற்று இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத திணைக்கள பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவில் திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த புகையிரதம் இயக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.