

யாழில் போதைப்பொருளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களாலும் பல்வேறு பகுதிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பூரண அணுசரணையுடன் “போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியிலான விழிப்புணர்வு நடவடிக்கை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது ஓவியம் வரைதல், சுலோகம் எழுதுதல் போன்ற போட்டிகள் போன்ற போட்டிகள் மாணவர்களிடையே நடாத்தப்பட்டன.