காசாவில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் ‘காசா குழந்தைகள் நிதியம்’ ஒன்றை நிறுவுவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களும் இப்தார் கொண்டாட்டங்களைக் கைவிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட நிதிக்கு பங்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக அரசாங்கத்தின் 1 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.