யானை, மனித மோதல்களால் கடந்த ஆறு மாதங்களில் 158 யானைகள் பலியாகியுள்ளது என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி 36 யானைகளும் கட்டுவெடிகளால் 28 யானைகளும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 15 யானைகளும் பலியாகியுள்ளன.
அறியப்படாத காரணங்களால் 45 யானைகள் பலியாகியுள்ளதாகவும் வனஜுவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த மாதம் 55 பேர் பலியாகியுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.