மொனராகலை, புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகொலவௌ பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து நேற்று, ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தல உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.