காணி உரிமையை வழங்குவதற்கான செயற்பாடுகள் அரசாங்கத்தின் பாதீட்டில் உள்வாங்கப்படவில்லை – ஜீவன்

0
11

பெருந்தோட்ட மக்களுக்காக கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட காணி உரிமையை வழங்குவதற்கான செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தின் பாதீட்டில் உள்வாங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.