காத்தான்குடிப் படுகொலையின் 33வது நினைவு தினம்: காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

0
293

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஷூஹதாக்கள் தினத்தை முன்னிட்டு, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள்,
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை வெளிப்படுத்தும் வகையில், கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ரஊப் மஜீத் தலைமையில் போராட்டம் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம்,
காத்தான்குடி வர்த்தகர் சங்கம், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி முதலாம்
குறிச்சி {ஹஸைனிய்யா பள்ளிவாயல் ஆகியவை இணைந்து இப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது.
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டமானது, காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதரிடம் பிரகடனமும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.