காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

0
131

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி. எஸ் .பி பண்டார தெரிவித்துள்ளார் .

மட்டக்களப்பு பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் ஆகியோரின் ஆலோசனையின் கீழ் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கடற்படை வழங்கிய இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி – 6 கடற்கரை வீதி பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துசெய்துள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து 9 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.