அம்பாறை கல்முனை நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம்

0
110

அம்பாறை கல்முனை நற்பிட்டிமுனையில் சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிய, சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் இன்று இடம்பெற்றது.

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் தலைவர் ஐ.எல்.ஏ.குத்தூஸ் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தொற்றா நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் மாரடைப்பு, உயர் குருதியமுக்கம் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகள் இடம்பெற்றன. வைத்திய அதிகாரிகளான டொக்டர் எஸ்.அஜ்மல் இம்தியாஸ், டொக்டர் எம்.ஏ.பயாஸ், சுகாதாரப் பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் எம்.நிஜாமுதின், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களான ரி.எஸ்.சாஹிரா மற்றும் எஸ்.ஜீவானந்தி உள்ளிட்ட பலரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இதன்போது பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.