காத்தான்குடியில் பாடசாலையின் பெயர்ப் பலகை சேதம்

0
153

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசியப் பாடசாலையின் பெயர்ப் பலகை இனந்தெரியாதோரினால் இன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாடசாலை நிருவாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.