காத்தான்குடியில் பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனை

0
262

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று 38 பேரிடமிருந்து பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டதுடன் 11 பேருக்கு அண்டிஜன்பரிசோதனைகள் இடம்பெற்றன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீலின் தலைமையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீரின் மேற்பார்வையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.ரஹ்மத்துல்லாஹ், செனவிரத்ன, சகாதேவன்உட்பட சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்றதுடன் அண்டிஜன் பரிசோதனையையும் மேற்கொண்டனர்.

காத்தான்குடி ஊர் வீதியில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் இப் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

பயணத்தடையை மீறி வீதியில் நடமாடிய சிலருக்கும் இதன்போது அண்டிஜன் பரிசோதனை இடம் பெற்றதுடன் பி.சி.ஆர்பரிசோதனைகளுக்கான மாதிரிகளும் பெற்றப்பட்டன.

இதில் 11 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் போது ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதுடன் ஏனைய 38பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டதாக காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.