காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய தேசிய பாடசாலையில் முப்பெரு விழா

0
209

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசிய பாடசாலையில் பாடசாலையின் அதிபர் திருமதி நயிமா சலாம் தலைமையில் மூன்று நிகழ்வுகள் நடைபெற்றன.

இப் பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமைக்கான பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் பரிசளிப்பு விழா மற்றும் மாணவி தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் வைபவம் ஆகிய மூன்று விழாக்கள் நடைபெற்றன.

இதன் போது மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் எஸ். எம்.எஸ்.உமர் மௌலானா கலந்து கொண்டதுடன் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். கலாவுதீன் உட்பட வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர்கள் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://youtu.be/BxBBM5cB7D0