காத்தான்குடி நகர சபை பிரிவில் வடிகாண்கள் துப்புரவு

0
284

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் வடிகாண்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுப்பபட்டன.

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் பணிப்பின் பேரில் காத்தான்குடி நகர சபை பிரிவில் வடிகாண்களை துப்பரவு செய்யும் நடவடிக்கை துரிதமாக இடம் பெற்று வருகின்றது.

மழைகாலத்தை கருத்திற் கொண்டும், டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் வகையிலும் கழிவு நீர், மற்றும் மழை நீர் வடிகாண்களுக்குள் தேங்கி நிற்காத வகையில் வடிகாண்கள் துப்பரவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி இராசா ஆலீம் வீதி பகுதியில் காத்தான்குடி நகர சபையின் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று வடிகாண்கள் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.