காத்தான்குடி மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணம்,நிவாரணப் பொருட்கள் நாவலப்பிட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கையளிப்பு

0
224

நாவலப்பிட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி வர்த்தக சங்கத்தினால் காத்தான்குடி மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் நிவாரணப் பொருட்கள் என்பன நாவலப்பிட்டி நகர் ஜூம் ஆ பள்ளிவாயலில் வைத்து நாவலப்பிட்டி பள்ளி வாயல்கள் சம்மேளன பிரதிநிதிகளிடம் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள் இன்று கையளித்தனர்.

இதன் போது ஒன்பது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணமும் அரிசி ,நூடில்ஸ், தலையணைகள். குழந்தைகளுக்கான புதிய ஆடைகள், மற்றும் நிவாரணப் பொதிகள் என்பன இதன்போது கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி வர்த்தக சங்க தலைவரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான கே.எல். எம. பரீட்.வர்த்தக சங்க செயலாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான எம்.எம.ஆரிப். வர்த்தக சங்க பொருளாளரும் சமூக செயற்பாட்டாளருமான மக்பூல். இமாஸா நிறுவன உரிமையாளரும் சமூக செயற்பாட்டாளருமான .அஜ்வத் வர்த்தக சங்க உப பொருளாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரீடம் ரஹீம் . மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் இமாம் அஷ்ஷெய்ஹ் பாஸில் முப்தி உட்பட காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது நாவலப்பிட்டி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்‌.முஸம்மில் உட்பட நாவலப்பிட்டி பள்ளி வாயல்கள் சம்மேளன பிரதிநிதிகள். அனர்த்த குழு பிரதிநிதிகளிடம் சேகரிக்கப்பட்ட நிதியையும் நிவாரண பொருட்களையும் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள் கையளித்தனர்.