காரைதீவு அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி
அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்

0
157

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு இன்று காரைதீவு மஹா விஷ்ணு ஆலயத்திலிருந்து பிரதம குரு தியாகராஜா குருக்களின் பூசை நிகழ்வுடன் மக்களின் நல்வாழ்வு அருள் வேண்டி அம்மன் பக்தர்களால் பாற்குடபவனி நிகழ்வு இடம் பெற்றது.

கடந்த இரு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட தொற்றுநொய் தொடர்hபாக ஆலய திருவிழாக்கள் மட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இம்முறை அதிகளவிலான அம்மன் பக்கதர்கள் வெளியிடங்களிலிலிருந்து பாற்குட பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய தலைவர் இராநாதனினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆலய பூசை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 22.06.2022 அன்று கடல்நீர் எடுத்துத் திருக்கதவு திறத்தலுடன் 10 நாட்கள் திருவிழா இடம் பெற்று எதிர் வரும் 01.07.2022 அன்று தீ மிதிப்புடன் நிறைவு பெறும்.