சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக காரைதீவு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு புகைத்தல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றதுடன்
தெரிவு செய்யப்பட்ட காரியாலயங்களான பிரதேச செயலகம், தபாலகம். வங்கிகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் புகைத்தல் பாவனை தடை சுவரெட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது.
இந் நிகழ்வுகளில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.