காரைநகரில் இன்றும்
1114 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது!

0
212

காரைநகரில் இன்றும் அதிரடியாக
1114 பேருக்கு தடுப்பூசி ஏற்றல்!
நாளை ஜே-44 பிரிவு மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (01) செவ்வாய்க்கிழமை 1114 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டது. இந்த எண்ணிக்கையுடன் காரைநகரில் இதுவரை 2368 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50,000 தடுப்பூசிகளில் கூடியளவான மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட் பிரதேசமாக காரைநகர் அமைந்திருக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணியில், அன்றைய தினம் 538 பேருக்கும் நேற்று திங்கட்கிழமை 716 பேருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. இன்றைய தினம் 1114 பேர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இன்று ஜே-42 மற்றும் ஜே-48 ஆகிய கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

நாளை ஜே-44 கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. மக்கள் உரிய நேரத்திற்கு வருகைதந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காரைநகரில் தடுப்பூசி ஏற்றும் பணிகளை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு.ஆ.கேதீஸ்வரன் அவர்கள் இன்று நேரில் வருகைதந்து பார்வையிட்டார்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி திரு.யோ.யதுநந்தன் அவர்களின் தலைமையில் காரைநகர் பிரதேச செயலாளர் திரு.ம.ஜெகூ அவர்களின் ஒத்துழைப்புடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கூட்டாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் காரைநகரில் தினமும் அதிகளவு மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.