காரைநகரில் வீடு எரித்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல் விரைவில் கைது செய்யப்படும்! யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்தெரிவிப்பு.

0
156

காரைநகர் பிரதேசத்தில் இளைஞர் குழு ஒன்று நேற்று மாலை காரைநகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரை வாள் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில் ஊர்காவல்துறைபொலிசாரினால் குறித்த கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு குறித்த எரிபொருள் நிரப்பு உரிமையாளரின் உறவினரின் வீடு இளைஞர் குழு ஒன்றினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது குறித்த விடயங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட பிரதி போலீஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் குறித்த குழுவின் பின்னணி மற்றும் குறித்த குழுவுடன் தொடர்புடையோர் மற்றும் வீடு எரித்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என யாழ் மாவட்ட பொலிஸ் மாஅதிபர் உறுதிபட தெரிவித்துள்ளார்.