காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு அதிகளவில் பெற்றோல்நிரப்பியமையாலே நேற்று காரைநகரில்  குழப்பம்!

0
154

காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு அதிக அளவில் பெற்றோல்நிரப்பியமையாலேயே நேற்று காரைநகரில்  குழப்பம்

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் காணப்படுகின்றது

 அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று முன்தினம் அரசுஊழியர்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்தது நேற்றைய தினம் பொதுமக்களுக்கு மாத்திரம்  எரிபொருள் விநியோகிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது காரைநகர் பிரதேச செயலகத்தை சேர்ந்த ஒரு அரச உத்தியோகத்தர் எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு வந்து 

தனது மோட்டார் சைக்கிளிற்கு தான் முழுமையாக எரிபொருள் நிரப்பிய மையினால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது பொதுமக்களுக்கு 1500 ரூபாவுக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட தோடு குறித்த இடத்திற்கு வருகைதந்த அரசாங்க உத்தியோகத்திற்கு அதிக அளவில் எரிபொருள் நிரப்பிய மையினாலேயே அவ்விடத்தில் குழப்பம் ஏற்பட்டது குறித்த அரச உத்தியோகத்தர் நேற்று முன்தினமும் எரிபொருள் நிரப்பியதை பொதுமக்கள் அவதானித்ததாகவும் அரச உத்தியோகத்திற்கு எவ்வாறு அதிகளவில் எரிபொருள் வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி வீதியை மறித்து குழப்பத்தில் ஈடுபட்டனர்.

 எனினும் குறித்த விடயத்திர் பொலிசார் மற்றும் பிரதேச செயலர் உடனடியாக தலையிட்டு  தீர்வினை  பெற்று கொடுத்துள்ளதோடு எரிபொருள் விநியோகமும் மூன்று மணி நேரமாக நிறுத்தப்பட்டு பின் விநியோகிக்கப் பட்டுள்ளது,

ஒரு அரசு ஊழியர் 24 மணி நேரத்திற்குள் இரண்டு தடவைகள் எரிபொருள் நிரப்ப முடியுமாயின் சாதாரணமான பொதுமகன் அன்றாடம் முச்சக்கர வண்டி செலுத்தி வாழ்வாதாரத்தை மேற்கொள்பவரின்

நிலை என்ன என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் எனினும் மாவட்ட அரசாங்க அதிபர் ,காரைநகர் பிரதேச செயலர் குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறின் பொது மக்களின் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.