நுவரெலியா மாவட்டம் மடக்கும்புர தொழிற்சாலையில், காலநிலையை முன்கூட்டியே எதிர்வு கூறும் கருவியொன்று, இன்று, அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி, இந்தியாவில் இருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மடக்கும்புர தோட்ட பொது முகாமையாளர் கௌஷல் மாதவன் ஏற்பாட்டில், குறித்த பகுதிக்கான துணை தலைமை நிர்வாக அதிகாரி கீத்குமார தலைமையில், நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது, மண் பரிசோதனை செய்யக் கூடிய கருவி மற்றும் தேயிலை கொழுந்தின் தரத்தை தானாக ஆய்வு செய்து தரவுகளை வழங்கக்கூடிய கருவியும், அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில், எல்பிட்டிய பிளான்டேஷனுக்கு உட்பட்ட முகாமையாளர்கள், தோட்ட அதிகாரிகள், தொழிநுட்பவியலாளர்கள், தொழிற்சாலை அதிகாரிகள் பங்கேற்றனர்.