காலியில் கார் விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து சேதம்

0
72

காலி, பலபிட்டிய ஏத்கந்துர பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

குறித்த கார் தொலைபேசி தூணில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, தீப்பிடித்து எரிந்ததாக அதன் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த போது அதனுள் சாரதி உட்பட மூவர் இருந்ததாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.