காலி, இமதுவ – அங்குலுகஹா சந்தியில் இன்று காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் குறித்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் இமதுவ மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.