காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

0
16

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள், தொலைபேசி சார்ஜர்கள், புகையிலை மற்றும் லைட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இனந்தெரியாத நபரொருவர் காலி சிறைச்சாலையின் பின்புறத்தில் உள்ள கூரை வழியாக சிறைச்சாலைக்குள் பொதி ஒன்றை வீசியுள்ளார். இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் குறித்த பொதியை சோதனையிட்டுள்ளனர்.

குறித்த பொதியிலிருந்து ஐந்து கையடக்கத் தொலைபேசிகள், மூன்று தொலைபேசி சார்ஜர்கள், நான்கு லைட்டர்கள் மற்றும் புகையிலைகள் என்பன சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.