காலி சிறைச்சாலையில், அடையாளம் காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று காலி சிறைச்சாலையில் ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளது.
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நேற்று உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.